விடுதலையளிக்கும் பலி காணிக்கை

I. தொ.நூ 22:1-18;
II. 2கொரி 9:1-15;
III. லூக் 21:1-4
A. காணிக்கையின் முன்னுரை

பலியும் காணிக்கையும் ஒன்றே
• காணிக்கை செலுத்தி, கடவுளை ஆராதிக்கும் போது, காணிக்கை பலியாகிறது.
• காணிக்கையில், தனிமனித, சமதாய, அர்ப்பணம் அடங்கியுள்ளது.
• காணிக்கை வழியாக, ஒருவர் தன்னையே கடவுளுக்குத் தருகிறார்.
• அன்பளிப்பில் ஒருவருடைய “அன்பு இதயம்” இருக்கிறது.
• ஒருவர் தான் பற்று வைத்திருக்கும் ஒரு பொருளை, பணத்தை, அல்லது ஆளை, இன்னொருவருக்குக் கொடுக்கும் போது, அந்த பொருளை விட, அந்த ஆளை தனக்கு உயர்ந்தவர் என்று, வெளிப்படையாக அங்கீகரிக்கிறார். (உ.ம்) ஆபிரகாமிடம் மகனை பலி கேட்டல்.
• நம்மை கடவுளிடம் நெருங்கிய அன்புறவு வைக்க உதவுவது காணிக்கை.
• பற்றறுத்து, பற்றிக்கொள்ளவும், கவலை கலக்கம் நீங்கி வாழவும், ஆத்மீகப் பயிற்சியளிப்பது – காணிக்கை.
B. மூல வசனங்கள் மூன்று
• வி.ப 23:15 – “எவரும் வெறுங்கையராக என் திருமுன் வர வேண்டாம்”
• நீ.மொ 3:9,10 – “உன் செல்வத்தைக் கொண்டு, ஆண்டவரைப் போற்று, உன் விளைச்சல்கள் எல்லாவற்றின் முதற்பலனையும் ஆண்டவருக்கு காணிக்கையாக்கு. அப்போது, உன் களஞ்சியங்கள் நிறைந்திருக்கும்”.
• மத் 6:21 – “உங்கள் செல்வம் எங்குள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்”.

C.காணிக்கை அளிக்க கட்டளை
• காணிக்கை செலுத்த, காலம் தாழ்த்தாதே – வி.ப 22:29,30.
• தாராளமாக காணிக்கை கொடுக்க, மக்களிடம் கூறு – வி.ப 25:2, 35:5.
• உன் செல்வத்தைக் கொண்டு ஆண்டவரை ஆராதி – நீ.மொ 3:9, மீக் 4:13.
• இலவசமாகப் பெற்றீர்கள் - இலவசமாகக் கொடுங்கள் - மத் 10:8, லூக் 6:38, 12:33.
• வெறுங்கையோடு என் திருமுன் வராத படி, பார்த்துக் கொள்ளுங்கள் - வி.ப 23:15, இ.ச 16:16, சீரா 35:4.
D.பலவகை காணிக்கைகள் (பலிகள்)
• தனிக் காணிக்கை – பொது காணிக்கை – லேவி 4:1-3, 13.
• வெளிக் காணிக்கை – ஆத்மீக (அக) காணிக்கை – லேவி 5:1-13.
• தான்னார்வக் காணிக்கை – கட்டளையிட்ட காணிக்கை – லேவி 22:21; இ.ச 12:6.
• ஏற்றுக்கொள்ளப்பட்ட - புறக்கணிக்கப்பட்ட காணிக்கை – தொ.நூ 4:4,5.
• சுத்தமான காணிக்கை – அசுத்தமான காணிக்கை – மலா 1:13,14; லேவி 27:10.
• உண்மை காணிக்கை – அடையாளக் காணிக்கை – தொ.நூ 22:2,3.

E.பத்திலொரு பாகமும் காணிக்கையும்
• பத்திலொரு பாகம் கொடுக்க கட்டளை – லேவி 27:30; எண் 18:21,26; இ.ச 12:6; 14:28; 26:12.
• பத்திலொன்று கொடுத்துப் பாருங்கள் - மலா 3:10.
• ஆபிரகாமும், யாக்கோபும், பத்திலொரு பாகம் கொடுத்தனர் - தொ.நூ 14:20, 28:22.
• எசேக்கியாவின் கட்டளைப்படி, மக்கள் பத்திலொரு பாகம் மகிழ்ச்சியாகக் கொடுத்தனர் - 2குறி 31:5, நெகே 10:38, 12:44,13:12 .
F.காணிக்கையின் பயன் அல்லது நோக்கம்
• பாவம் போக்கப்படும் - வி.ப 29:36,37, லேவி 5:10, எண் 15:25, கலா3 :13.
• அனைத்து செயல்களிலும் ஆசீர் கிடைக்கும் - இ.ச 14: 28,29.
• காணிக்கை( பலி) நன்றியின் வெளிப்பாடு – தி.பா 27:6.
• கடவுளோடு ஒப்புரவாக்கும் - உரோ 5:10; எபே 2:16.
• கடவுளின் கருணை கிடைக்கும் - தொ.நூ 4:4.
• களஞ்சியங்கள் நிறையும் - நீ.மொ 3:9,10.
• வானத்தின் பலகணிகளைத் திறந்து ஆசீர் கிடைக்கும் - மலா 3:10.

G.காணிக்கை எப்படியிருக்க வேண்டும்?
• விடுதலை பெற்றதற்கு வெளி அடையாளமான, நன்றியின் பலியாக, இருக்க வேண்டும் - மாற் 1:44; லூக் 5:14.
• காணிக்கை குறையற்றதாக, இருக்க வேண்டும் - லேவி 22:21.
• காணிக்கை, தூயதாக இருக்க வேண்டும் - லேவி 27:11,27.
• காணிக்கை முதன்மையானதாக இருக்க வேண்டும் - மலா 1:14.
• கடவுளுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும் - மலா 3:4.
• காணிக்கையை நல்ல மனத்தோடு கொடுக்க வேண்டும் - 2குறி 24:5-11.
• மகிழ்ச்சியோடும், நிறைவோடும் கொடுக்க வேண்டும் - உரோ 12:8, 2கொரி 9:7.
• தகுதிக்கு ஏற்ப கொடுக்க வேண்டும் - லேவி 14:30, தி,தூ 11:29, 2கொரி 8:12, எஸ் 2:69.
• நேரிய உள்ளத்தோடும், விசுவாசத்தோடும், பலி செலுத்த வேண்டும் - தொ.நூ 4:4; தி.பா 27:6; 107:22; 116:17; எபி 13:15; உரோ 12:1; பிலி 2:17; 4:18; எபி 13:12; தி.பா 51:17.
H. ஏற்புடைய – ஏற்புடையதல்லாத காணிக்கை:

ஏற்புடையவை
• பாவக் கழுவாய் பலி – லேவி 1:4.
• கட்டளையை கடைபிடிக்கும் ஊழியர்கள் செய்யும் பலி – எசா 56:7.
• தாழ்வுற்று நொறுங்கிய உள்ளத்தின் பலி – தி.பா 51:17.
• விசுவாசியின் தூய உயிருள்ள பலி – உரோ 12:1, பிலி 4:18.
• நன்மை செய்து, பகிர்ந்து வாழும் பலி – எபி 13:16, 1பேது 2:5.
• உதடு செலுத்தும் புகழ்ச்சி பலி – எபி 13:15.

ஏற்புடையதல்லாத காணிக்கை
• கட்டளைக்கு கீழ்ப்படியாதவரின் பலி வீண் - 1சாமு 15:22, நீ.மொ 21:3, மாற் 12:33.
• பொல்லாரின் பலி – நீ.மொ 15:8,
• தீச்செயல்களின் இரத்தப் பலி – எசா 1:11.
• குருடும், நொண்டியுமானவற்றைப் பலியிடுவது – மலா 1:8, ஓசே 8:13, ஆமோ 5:22, எரே 14:12, எசா 66:3, 1சாமு 13:9, தொ:நூ 4:5 .
I. பலி கொடுக்க மனமில்லாதவர்
• கஞ்சன் ஏழையாவான் - நீ.மொ 11:24, 21:13.
• சொத்துக்கு உரியவருக்கு அது மறுக்கப்படுகிறது – ச.உ 5:13, எசா 43:23, மலா 3:8.
• செலுத்த வேண்டிய காணிக்கையை மறுக்கிறார்கள் - எண் 13:10.
• லேவியருக்கு கொடுக்க வேண்டியதை மறுக்கிறார்கள் - நெகே 13:10.
• எனக்கு காணிக்கை தராமல், உங்கள் பாவங்களையே தந்தீர்கள் - எசா 43:24, மலா 3:8, தி,தூ 5:1,2.

J. தாராள குணமடையவர்
• இஸ்ரால் மக்கள் - ஆசாரக் கூடாரம் கட்ட காணிக்கை கொடுத்தனர் - வி.ப 36:5.
• சாரிபாத் விதவை – 1அர 17:13,15.
• பெத்தானியா மரியாள் - மத் 26:7.
• ஏழை விதவை – லூக் 21:4.
• ஆதி சபையினர் - தி.தூ 4:34.
• மாசிதோனிய சபைகள் - 2கொரி 8:3,4.
• தாவீது – தம் செல்வங்களை ஆலயத்துக்கு கொடுத்தார் - 2சாமு 8:11.
• சாலமோன் - ஆயிரம் எரிபலி செலுத்தினார் - 1அர 3:4.
Go to Top