''வாழ்வே நோன்பு"

மனிதனும் “சுயவிருப்பமும்”

கடவுள் மனிதனுக்கு, “சுயவிருப்பத்தை” தந்து, அவனை “மனிதனாகப்” படைத்தார்.

1. மனிதன், மனிதனாகப் படைக்கப்பட்டது, அவனுக்கு “சுயவிருப்பத்தை” தந்ததால்.
2. மிருகத்துக்கு “சுயவிருப்பம்” என்பது இல்லை.
3. எனவே, மனிதனை, மிருக நிலையிலிருந்து, மனித நிலைக்கு, உயர்த்தியது, அவனது “சுயவிருப்பம் தான்”.
4. இந்த சுயவிருப்பத்தை உடைய மனிதனுக்கு, அந்த சுய விருப்பத்தால் ஆபத்துக்களும் உண்டு.

சுய விருப்பமும் - மாற்று விருப்பங்களும்:
• மனிதனுடைய சுயவிருப்பத்துக்கு வெளியே, அவனைச்சுற்றி மூன்று விருப்பங்கள் உள்ளன.

1. அவனது “சரீரத்தின்” விருப்பம்,

2. அவனைச் சுற்றியிருக்கும், “உலகத்தின்” விருப்பம்,

3. அவனை ஏமாற்ற காத்திருக்கும் “அலகையின்” விருப்பம்.


• இந்த மூன்று விருப்பங்களும், அவனுடைய சுயவிருப்பத்துக்குள் நுழைய வாய்ப்பு உண்டு.

சுய விருப்பமும் - அடிமை நிலையும்:
1. மனிதனின் சுயவிருப்பம், வேறு விருப்பங்களுக்கு கட்டுப்படும் போது, அவன் அந்த விருப்பங்களுக்கே “அடிமையாகிறான்.”
2. இவ்வாறு, தன் சுயவிருப்பத்தை இழந்து போகிறான்.
3. மேலும், வேறு விருப்பங்களுக்கு அடிமையாகும் மனிதன், எந்த விருப்பத்துக்கு அடிமைப்பட்டானோ, “அதுவாக” மாறிவிடுகிறான்.

தெய்வ மனிதன் - சுயமனிதன் - வேறு மனிதன்:
1. சுயமனிதன், சரீர விருப்பங்களுக்கு, அடிமையாகும் போது, அவன், “மிருக மனிதன்” ஆகிறான்.
2. சுயமனிதன், உலக விருப்பங்களுக்கு அடிமையாகும் போது, அவன் “உலக மனிதன்” ஆகிறான்.
3. சுயமனிதன், பேயின் விருப்பபங்களுக்கு, அடிமையாகும் போது, அவன் “பேய்மனிதன்” ஆகிறான்.
4. இவ்வாறு, “கடவுளின் சாயலாக” படைக்கப்பட்ட மனிதன், தன் நிலையை இழந்துவிடுகிறான்.

கடவுளின் விருப்பமும் - கடவுளின் சாயலும்:

அவ்வண்ணமே, சுயமனிதன், கடவுளுடைய விருப்பத்துக்கு அடிமையாகும் போது, அவன் “கடவுள் மனிதன்” ஆகிறான்.

மனிதன் எப்போதும், தன் “சுய மனித நிலையை” இழந்துவிடக் கூடாது.

தன் சுய மனித நிலையை “பாதுகாக்க”, அவன் “சுயத்தில்” கடவுளுடைய விருப்பங்கள் இருக்க வேண்டும்.

அது ஒன்றே, அவனுடைய “மனித நிலைக்கு” பாதுகாப்பு.

“சுய மனிதனுடைய சாயல்” கடவுளுடைய சாயலாக இருக்க வேண்டுமென்றால், அவன் “கடவுளுடைய விருப்பங்களை” “தன் சுயத்தில்” வைத்துக் கொள்ள வேண்டும்.

"ஏதேன் தோட்டத்தின் நிகழ்ச்சி"


• கடவுள், “தன் சாயலாக” மனிதனைப் படைத்தார் - தொ.நூ 1:26,27.
• இந்த மனித படைப்பு, முழுமை அடைந்தது, தொ.நூ 2:16,17 வசனங்களில்.
• தொ.நூ 2:16 –ல் “உன் விருப்பம் போல் உண்ணலாம்” என்று, கடவுள் கூறினார்.
• இது, “சுய மனிதனின், சுய விருப்பம்”.
• இந்த சுயவிருப்பத்தில் வேறு விருப்பங்கள் நுழையும் போது, அவன் “சுயத்தை” இழந்து, மிருக, உலக, பேயின் நிலைக்கு தள்ளப்படுகிறான்.
• இதற்காகவே கடவுள், “தன் சாயலை” மனிதனுக்குள் பதிக்க, தொ.நூ 2:17–ம் வசனத்தைத் தந்தார்.
• அதாவது, “இதை உண்ணாதே” என்ற “தன் விருப்பத்தை” மனிதனுக்குத் தந்தார் - தொ.நூ 2:17.
• மனிதன், இந்த “கடவுளின் விருப்பத்தை” தன் “சுயவிருப்பத்தில்” வைத்து, வாழ்ந்த போது, அவன், “கடவுளின் சாயலில்” இருந்தான்.
• அதாவது, “கடவுள் மனிதனாக” இருந்தான்.


"கட்டுப்பட்ட சுதந்திரம் - சீரா 15:14,15"

• கடவுள் மனிதனுக்குத் தந்த “சுயவிருப்பம்” , சுதந்திரமுடையது (Free will). ஆனால் அது கட்டுப்பாடற்ற “சுதந்திரம்” அல்ல.
• “ஒருகட்டுப்படான சுதந்திரத்தை” கடவுள் மனிதனுடைய “சுயவிருப்பத்தில” வைத்தார்.
• அது “கடவுளுடைய விருப்பத்துக்கு கட்டுபட்ட சுதந்திரம்” எனபதை தொ.நூ 2 : 6-17 ல் பார்க்கிறோம்.
• மனிதன் வேறு விருப்பங்களுக்கு அடிமையாகும் போது, தன் சுதந்திரத்தை இழந்து விடுகிறான்.
• அவனது “ஆளுமையை” வேறு விருப்பங்கள் வசப்படுத்திக் கொள்கின்றன.
• ஆனால், அவனது சுயவிருப்பம், கடவுளுடைய விருப்பங்களுக்கு கட்டுப்பட்டிருக்கும் போது, அவன் சுயவிருப்பத்தை இழக்காத, “சுதந்திர மனிதனாக” வாழ்கிறான்.
• அதாவது, “கட்டுப்பட்ட சுதந்திர மனிதன்”.
• ஒன்று, சுதந்திரம் இழந்த “அடிமை மனிதன்”, மற்றொன்று, “கட்டுப்பட்ட – சுதந்திர மனிதன்”
• இதில் எது வேண்டுமோ, அதை மனிதன் தேர்ந்து கொள்ளலாம்.
• மனிதனை கடவுள் “சற்றுச்சிறியவனாக” படைத்ததன் பொருள் இதுவே. தி.பா 8:5.
கடவுள் சாயலை இழந்த மனிதன்:

ஆனால், மனிதன் சில நாட்களில், தன் சுயவிருப்பத்தில், “கடவுளுடைய விருப்பத்தை” வைப்பதை விட்டுவிட்டு, சரீர, உலக, பேயின் விருப்பத்தை அங்கே வைத்தான் - தொ.நூ 3:1-6.

இதனால், மனிதன், “கடவுள் மனிதன்” என்ற நிலையை இழந்து, “உலக, மாமிச, பேய் மனிதனாக” மாறினான்.


மனித பிறப்பும், “மூன்று வித” விருப்பங்களும்:
• மனிதன் இந்த உலகில் பிறக்கும் போதே, அவனில் “சுயவிருப்பம்” என்பது இருக்கும் என்று பார்த்தோம்.
• அதோடு, சரீர விருப்பம், உலக விருப்பம், பேயின் விருப்பம் கூட, “அவனைச் சுற்றியே” இருக்கும்.
• இந்த மூன்று விருப்பங்களும் அவனுக்குள் நுழைந்து, அவனை அடிமைப்படுத்த சாதா போராடிக்கொண்டிருக்கும்.
• இதை கீழ்க்காணும் பகுதியில் பார்ப்போம்.
"பவுலின் வாழ்வில்: (உரோ 7:14-25)"
சுயவிருப்பம்:
1. “எதை செய்ய விரும்புகிறேனோ” – உரோ 7:15.
2. “நான் விரும்பாததை” செய்கிறேன் - உரோ 7:16.
3. “நான் விரும்பும்” நன்மையை – உரோ 7:19.
4. “என் மனம் ஏற்றுக்கொள்ளும்” சட்டம் - உரோ 7:23.

கடவுளின் விருப்பம் (சட்டம்):
1. “சட்டம்” நல்லது என, ஏற்றுக்கொள்கிறேன் - உரோ 7:16.
2. “கடவுளின் சட்டத்தைக் குறித்து” உளமார மகிழ்கிறேன் - உரோ 7:22.
3. “கடவுளின் சட்டத்துக்கு” கட்டுப்பட்டிருக்கும் நானே – உரோ 7:25.


வேறு விருப்பங்கள் :
1. “நான் விரும்பாததை” செய்கிறேன் - உரோ 7:20.
2. என்னுள் “குடிகொண்டிருக்கும் பாவம்” அதை செய்கிறது – உரோ 7:20.
3. “என் உறுப்பில்” வேறு ஒரு “சட்டம் (விருப்பம்)” உள்ளது – உரோ 7:23.
4. “என் உறுப்புக்களில், இருக்கும் “பாவச்சட்டம்” என்னைக் “கட்டுப்படுத்துகிறது” – உரோ 7:23.
5. நான் “ஊனியல்பினன்” – உரோ 7:14.
6. “என் மனத்தால் (சுய விருப்பம்)” “கடவுளின் சட்டத்துக்கு (கடவுளின் விருப்பம்)” கட்டுப்பட்டிருக்கும் நானே, “ஊனியல்பின் பாவ சட்டத்துக்கு (சரீர விருப்பம்)” கட்டுப்படுகிறேன் - உரோ 7:25.

போராட்ட வாழ்வு:

இங்கே ஒரு போராட்ட வாழ்வைக் காண்கிறோம்.

சுயவிருப்பம், கடவுளின் விருப்பத்திற்கும், வேறு விருப்பங்களுக்கும் இடையே, போராடிக் கொண்டிருக்கிறது.

பரிசுத்தவானாகிய (கடவுளின் விருப்பத்துக்கு கட்டுப்பட்ட) பவுலுக்கே இந்த போராட்டம் இருந்ததென்றால், சாதாரண மனிதர் நிலை என்ன? என்பதை எண்ணிப்பார்ப்போம்.


நோன்பும், இரட்சிப்பு அபிஷேகமும்:

இந்தப் போராட்டத்தில், வெற்றிக்கொள்ள, பவுல் முதலில், “தன்னடக்கம் கட்டுப்பாடு, என்ற நோன்பை கைக்கொள்கிறார் - 1கொரி 9:25,27.

இரண்டாவது, அவர் தான் பெற்ற “இரட்சிப்பு அபிஷேகத்தை” நினைவு கூருகிறார் - உரோ 7:25.

“தன்னடக்கம் கட்டுப்பாடு” எனும், நோன்பு வாழ்வை கைககொண்ட ஒருவர், தம்முடைய “இரட்சிப்பால், அபிஷேகத்தால்” “வேறு விருப்பங்களை” மேற்கொண்டு, “கடவுளின் விருப்பத்துக்கு அடிமையாகி” – லூக் 1:38, வாழ முடியும் என்பது, பவுலின் அசைக்க முடியாத படிப்பினை.

"இயேசுவின் வாழ்வில்: (மத் 26:36-44)"


• கெத்சமெனியில் “இயேசுவின் மனத்தில்” துயரமும் கலக்கமும் பற்றிக்கொள்கிறது – மத் 26:37-38.
• அவ்வேளையில், “உடலின் விருப்பம்” இயேசுவை மேற்கொள்ளப் பார்க்கிறது.
• “இத்துன்பக்கலம், என்னை விட்டு அகலட்டும்” – மத் 26:39.
• “உடல்” எப்போதும் துன்பத்தை தவிர்த்து, சுகத்தையே ஆசிக்கும்.
• எனவே “துன்பத்தின்” மத்தியில், உடல் தன் விருப்பத்தை இயேசுவுடைய “சுயத்தினுள்” திணிக்கிறது.
• ஆனால், “இயேசுவின் சுய விருப்பம்”, “கடவுளின் விருப்பத்தின்” மட்டில், “சாய்ந்திருக்கிறது”.
• ஆனாலும், “என் விருப்பத்தின்படி” அல்ல, “உம் விருப்பப்படியே” ஆகட்டும் - மத் 26:39,42,44, என்று இயேசு கூறுகிறார்.
• மூன்று முறை, “உடலின் விருப்பம்” நெருக்குகிறது. அந்த மூன்று முறையும், “இறைவிருப்பத்துக்கு” இயேசு தன்னை ஒப்புக் கொடுத்தார்.


சீடரின் நிலை:
• ஆனால், சீடர்களோ, “உடலின் விருப்பத்துக்கு” அடிமையாகி உறங்கிக்கொண்டிருந்தனர் - மத் 26:40,43,45.
• இங்கே சீடர்கள் என்பது, நாம் அனைவருமே.


ஏதேன் தோட்டமும் - கெத்சமெனித் தோட்டமும்:
• ஏதேன் தோட்டத்தில், “உலக , மாமிச, பிசாசின் விருப்பத்துக்கு” ஆதிப்பெற்றோரின் “சுய விருப்பம்” அடிமையானது – தொ.நூ 3:1-6.
• ஆனால், கெத்சமெனித் தோட்டத்தில், “உடலின் விருப்பத்தை” , “கடவுளின் விருப்பத்தால்” இயேசுவின் “சுயவிருப்பம்” மேற்கொண்டது.
• இவ்வாறு, ஆதிப்பெற்றோர், “உலக, மாமிச, பிசாசின் விருப்பத்துக்கு” அடிமையானதன் விளைவை, இயேசு பரிகரித்தார்.

சாய்வு எந்தப் பக்கம்:
• மரம் எந்தப் பக்கம் சாய்ந்திருக்கிறதோ, அந்தப் பக்கம் தான் விழும்.
• “மனித சுயம்” உலகம், பிசாசு, சரீரத்தின் விருப்பங்களின் பக்கம் சாய்ந்திருந்தால், நெருக்கடி வேளையில், “சுயம்” அவற்றின் பக்கம் தான் விழும்.
• “மனிதசுயம்” கடவுளின் விருப்பங்கள் பக்கம் சாய்ந்திருந்தால், நெருக்கடி வேளையில், அது கடவுள் பக்கமே விழும்.
ஆவிக்குரிய ஆதிப்பெற்றோரும் - நோன்பும்:
• ஆதிப்பெற்றோர் ஆவிக்குரியவர்கள் - தொ.நூ 2:7.
• அவர்களுடைய “சுய விருப்பம்”, தன்னடக்கம், கட்டுப்பாட்டை கடைபிடித்தது வரையிலும், “சுயத்தின்” சாய்வு, கடவுளுடைய விருப்பத்தின் பக்கமே இருந்தது.
• உலகம், பிசாசு, சரீர, விருப்பங்களின் மட்டில், தன்னடக்கம், கட்டுப்பாடு எனும் “நோன்பை”, அவர்கள் கடைபிடிக்கத் தவறிய போது, அவர்கள் “சுயம்” உலகம், பிசாசு, சரீர விருப்பங்களின் பக்கம் சாய்ந்தது.
• கடவுள் கூறியபடியே, சாவுக்கு ஏதுவான துன்பங்கள் அவர்களைத் தொடர்ந்தன – தொ.நூ 3:14-19.

பவுலும் நோன்பும்:
• பவுலுக்கும் போராட்டம் இருந்தது – உரோ 7 : 14 -25.
• ஆனால் போராட்டத்தில் அவரது “சுயம்” தன்னடக்கம் கட்டுப்பாடு என்னும் நோன்பைக் கடைபிடித்ததால்”, அது, கடவுளின் விருப்பத்தின் பக்கம் சாய்ந்தது – 1 கொரி 9 : 25, 27.
• இதனால் அவர் “இரட்சிப்பு – அபிஷேகத்தில்” நிலைத்து வாழ முடிந்தது - உரோ 7 : 25.

இயேசுவும் நோன்பும்:

கெத்சமெனியில் இயேசுவின் போராட்டத்திலும் - மத் 26 : 39-44, உலக, மாமிச விருப்பங்கள் அவரை நெருக்கிய போதும், அவர் “கடவுளின் விருப்பம்” பக்கமே சாய்ந்தார்.

வனாந்தரத்தில் அவர் தொடங்கிய “நோன்பு வாழ்வு” அவருக்கு கல்வாரி வரையிலும் துணை செய்தது.


நோன்பு காலமும் - நோன்பு வாழ்வும்:

ஆண்டுக்கு ஒருமுறை நாற்பது நாட்கள் நோன்பு என்பது, ஆவிக்குரிய மக்களுக்கு எந்தவிதத்தில் அமைகிறது என்று பார்ப்போம்.

இது வாகனம் ஒன்றை ஒர்க்ஷாப்பில் விடுவது போல. ஆண்டுக்கு ஒரு முறை பழுதுபார்த்து சர்வீஸிங் செய்து பழையன களைந்து, புதியன பொருத்தி, வாகனத்தை “தகுதிப்படுத்துதல்” அங்கே நடைபெறும். அது, சரியாக்கப்பட்டதும், தகுதிச்சான்றிதழ் பெற்று, எஞ்சிய நாட்கள் முழுவதும் நலமாக ஒடும்.

அவ்வாறே, ஆவிக்குரிய பிள்ளைகள், தங்களுடைய “நோன்பு வாழ்வை” அலசிப்பார்த்து, குறைகளைக் களைந்து நிறைகளை வளர்க்க, “நோன்பு காலம்” அமைகிறது.

நோன்புகாலத்தில் நாம் நிறைகுறை ஆராய்ந்து மீண்டும் நம்முடைய நோன்புவாழ்வை நேர்த்தியாகவும், மிடுக்காகவும் தொடர, பயிற்சிகளும், வழிநடத்தல்களும் தரப்படுகின்றன.

“நோன்பு காலம், நோன்பிருக்கும் காலம்”; மற்றகாலங்கள் “எப்படியும் வாழும் காலம்” என்பது, ஆவிக்குரிய கிறிஸ்தவர்களுக்கு பொருந்தாது.

ஆனால் ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் நோன்பு காலத்தில் “வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி” எசா 38: 1-3, குற்றங்குறைகளுக்காக ஆண்டவரிடம் பொறுத்தல் கேட்டு மீண்டும் முழு நிறைவோடு ஒரு “நோன்பு வாழ்வை”, நோன்பு காலத்துக்கு பின் தொடர வேண்டும்.

PRAISE THE LORD
Go to Top